இந்தியாவிலுள்ள பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாமல் ரகசியமாக பிரித்தானியாவுக்கு தப்பியோடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மூன்றாவது திருமணத்துக்கு தயாராகிவிட்டார்.
மதுபான ஆலை, ஐ.பி.எல் அணி, விமான நிறுவனம் என பல்வேறு தொழில் சாம்ராஜ்யங்களில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் இந்த விஜய் மல்லையா.
அப்போதெல்லாம் அந்த நிறுவனங்கள் சற்று லாபகரமாக இயங்கியதால் வங்கிகளும் விஜய் மல்லையா கேட்கும் கடன் தொகையை அவருக்கு வாரி வழங்கின.
ஆனால் இறுதியில் வாங்கிய கடனை திருப்பிசெலுத்தாத மல்லையா வங்கிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம் பிடித்தார்.
இதனால் பதறிய வங்கிகள் உச்சநீதிமன்றத்தையும் பல மாநிலங்களின் உயர்நீதிமன்றத்தையும் உதவிக்கு நாடின, இந்திய அரசும் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது.
வழக்கு சி.பி.ஐ வசம் சென்றது ஆனால் விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே அவர் பிரித்தானியா குடிமகனாக மாறி சி.பி.ஐக்கே அதிர்ச்சி அளித்தார்.
இன்று வரை அவரிடம் கடன் தொகையை வசூலிப்பதிலும் பிரித்தானியாவிலிருந்து அவரை இந்தியா கொண்டு வரவும் இந்திய அரசு திணறி வருகிறது.
விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பியோடிய போது இவருடன் பிங்கி லல்வானி என்னும் பெண்ணும் சென்றுள்ளதாக அப்போது செய்தி வெளியானது.
அந்த பிங்கி லல்வானி 2016ஆம் ஆண்டு முதல் மல்லையாவோடு இருக்கிறார் எனவும், மல்லையாவைப் பற்றி அனைத்து நடவடிக்கையும் அறிந்தவர் அவர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் பிங்கி லல்வானியை திருமணம் செய்துகொள்ளும் முடிவை மல்லையா எடுத்துள்ளார்.
கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மூன்றாவது திருமணத்துக்கு தயார் ஆகிவிட்டார் மல்லையா.