வடகொரிய ஜனாதிபதியின் மனைவி குறித்து வெளிவராத பின்னணி!

ஊடகங்களுக்கு அதிகம் முகம் காட்டாத வடகொரிய ஜனாதிபதியின் மனைவி குறித்து பல கதைகள் பரவலாக பேசப்படுகிறது.

சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உடன் அவரது மனைவி ரீ ஸால் ஜூ-வும் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் தொடர்பில் இதுவரை வெளிவராத சில தகவல்கள் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ரீ தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளிவந்ததில்லை. அவரது உணமையான பெயர், வயது, அவரது பெற்றோர் என எதுவும் இதுவரை எதுவும் வெளியானதில்லை.

ரீ என அறியப்படும் பெயர் கூட வெறும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே எனவும் குறப்படுகிறது.

வடகொரியாவின் பிரபல பாடகியான ரீ ஸால் ஜூ கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டபோது முதன் முறையாக கிம் பார்வையில் பட்டுள்ளார்.

அதன் அடுத்த சில வாரங்களில் வடகொரிய மக்கள் கிம் ஜாங் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நபர் இவர் தான் என உறுதி செய்தனர்.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஊடகங்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வரும் ரீ கடந்த 2005 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் வடகொரியா சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

பாடகியான ரீ, கிம் மற்றும் அவரது தந்தை நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் 2010 ஆம் ஆண்டு பங்குபெற்றுள்ளார்.

ரீயின் உண்மையான பெயர் Hyon Song-wol எனவும் கிம் உடனான திருமணத்திற்கு பின்னர் அவர் தனது பெயரை மாற்றியிருக்கலாம என தென் கொரிய உளவுப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு கிம் ஜாங் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து ரீ உடன் அவசரமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

அதே ஆண்டு தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த ரீ தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தையையும் 2016 ஆம் ஆண்டு 3-வது குழந்தைக்கும் தாயானார்.

கிம் உடன் திருமணத்திற்கு முன்னதாக 6 மாத காலம் சிறப்பு படிப்பு ஒன்றையும் ரீ முடித்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி திருமணத்திற்கு முன்னர் Ri Pyong-chol என்பவருடன் ரீ நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.