பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஏலக்காயும் ஒன்று.
வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் அதனை நாம் பயன்படுத்தலாம். இதில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சித்தமருத்துவத்தில் ஏலக்காய் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
ஏலக்காயைக் கொண்டு நீர் தயாரிக்க முதலில் ஐந்து முதல் பத்து வரை நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீருக்கு ஏற்ப ஏலக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனை பொடி செய்து, அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில் வேண்டுமானால் ஒரே ஒரு கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம்.
தண்ணீரை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். கொதிக்க ஆரம்பித்த சில நொடிகளில் ஆஃப் செய்துவிடுங்கள். இல்லையெனில் ஏலக்காயில் உள்ள துவர்ப்பு சுவை அதிகமாக நீரில் இறங்கிவிடும்.
பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து அதனுடன் பாதியளவு தண்ணீரைக் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் சுவைக்கு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து கொள்ளலாம்.
இந்த தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை இது தீர்த்திடும். இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
ஏலக்காய் நீர் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
பற்களில், ஈறுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று மற்றும் வாய்ப்புண்களை இது போக்கும். அதே போல கெட்ட நாற்றம் வருவதையும் தடுக்கும்.
ஏலக்காய் நீர் குடிப்பதினால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொண்டைப் பிரச்சனைகள், வைரஸ் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
ஏலக்காய் நீர் நம் உடலில் இருக்கும் செல்களின் உற்பத்திக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
இதனால் சருமம் பளபளப்புடன் ஆரோக்கியத்துடனும் இளமையுடனும் இருக்க இது உதவிடும்.
சிலருக்கு அதிக சூடு காரணமானவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ தொடர் இருமல் ஏற்பட்டிருக்கும்.
சளித்தொல்லை இல்லாது உங்களுக்கு இருமல் ஏற்பட்டால் இந்த நீரை குடித்தால் உடனடி பலன் கிடைக்கும்.