`விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும்!’ – விவேக் ஜெயராமன் விளக்கம்

சட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவேக் ஜெயராமன்

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 3 ஆண்டு சட்டப்படிப்பில் சசிகலாவின்  உறவினர் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் சேர்ந்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்ததில் முறைகேடு நடைபெற்றதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடிமீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சட்டப் பல்கலைக்கழகத்தில் விவேக் ஜெயராமன் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, என்.ஆர்.ஐ கோட்டா மூலம் மூன்று ஆண்டுகள் கொண்ட எல்.எல்.பி படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் குடும்பமே ஒரு மோசடிக் குடும்பம். அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாகச் சிறையில் அடைக்கப்படுவர்’’ என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு விவேக் ஜெயராமன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக விவேக் ஜெயராமன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
விவேக் வெளியிட்டுள்ள அறிக்கை

அந்த அறிக்கையில், அமைச்சர் ஜெயக்குமாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ள விவேக், தனது பெயரைச் சொல்லி குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

விவேக் வெளியிட்டுள்ள அறிக்கை