ஐரோப்பாவில் எந்த நாட்டு பெண்கள் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள்??

ஒட்டுமொத்த ஐரோப்பியாவில் பிரான்ஸ் பெண்களே அதிக பிள்ளைகளை பெற்றுக் கொள்வதாக புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பாவின் 28 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், பிரான்சில் உள்ள ஒவ்வொரு 100 தாய்மார்களும் 192 பிள்ளைகளை பெற்றெடுப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை ஒப்பிடுகையில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள ஒவ்வொரு 100 தாய்மார்களும் 134 பிள்ளைகளை பெற்றெடுக்கின்றனர்.

பிறப்பு விகிதம் அதிகமான ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியாவும் டென்மார்க்கும் 4-வது இடத்தில் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு 100 தாய்மார்களும் 179 பிள்ளைகளை பெற்றெடுக்கின்றனர்.

ஸ்வீடன் நாட்டில் ஒவ்வொரு 100 தாய்மார்களும் 185 பிள்ளைகளை பெற்றுக் கொள்வதாகவும், குழந்தை பிறப்பு விகிதத்தில் 3-வது இடத்தில் இருக்கும் அயர்லாந்தில் ஒவ்வொரு 100 தாய்மார்களும் 181 பிள்ளைகளை பெற்றுக் கொள்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறித்த பட்டியலில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவான நாடுகளில் போர்த்துகல்(1.36), சைப்ரஸ் மற்றும் மால்டா(1.37), கிரேக்கம்(1.38) என்ற 4 நாடுகள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக 2016 ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் 5.15 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளது.

2015 ஆம் ஆண்டை விடவும் இது 450,000 எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவில் பிறப்பு விகிதம் 1.6 என பதிவாகியிருந்தாலும் மக்கள் தொகையை தக்க வைத்துக்கொள்ள இது போதுமானதாக இல்லை எனவும் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.