இரவு படுக்க செல்லும் முன் எலுமிச்சைப் பழத்தில் பாதியை முகத்தில் தடவிக் கொண்டு காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பான அழகுடன் இருக்கும்.
- எலுமிச்சை பழத் தோலுடன் உப்பைச் சேர்த்து காய வைத்து அதை பவுடராக்கி பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
- பிரிட்ஜில் எலுமிச்சை தோல் வைத்தால் மணக்கும். அதனால் பிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வராது.
- எலுமிச்சையின் தோல் மிகவும் நறுமணம் மிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
- எலுமிச்சையின் தோல் நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்களை வளரத் தூண்டுகிறது.
- எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்திற்கு ஸ்க்ரப் செய்யலாம்.
- எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.
- கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
- நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பின் எலுமிச்சை தோலை நகங்களின் மீது தேய்த்து கழுவி விட வேண்டும். இதனால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.
- எலுமிச்சை தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வர பற்களின் மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து வெண்மை அடையும்.
- எலுமிச்சை தோலுடன் ஒயிட் வினிகர் கலந்து அதை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் 2 வாரம் வைத்து அதை கிரானைட் மற்றும் மார்பில் தவிர அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம்.
- வீட்டில் எறும்பு, கரப்பான் தொல்லை இருந்தால் உடனே எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும்.