சோழர்களின் மிகச்சிறப்பான ஆட்சியை மெய்ப்பிக்கும் வண்ணம் அவர்கள் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்களில் கோயில்கள் மிக முக்கியமானவையாகும். அவற்றில் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியைக் கொண்டுள்ள இந்த கோயில் முதன்மையானதாகும். தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகரான கோயில் என்றால் மறுக்க இயலாது. வாருங்கள் அரியலூருக்கு செல்வோம்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில், 1000 முதல் 2000 வருடங்கள் பழமையானதாகும். இங்கு பிரகதீஸ்வரர், பெரியநாயகி தாயாரோடு அருள்பாலிக்கிறார்.
மாசி சிவராத்திரி, ஐப்பசி மாதம் நிகவும் பௌர்ணமி, பங்குனித் திருவிழா மற்றும் மார்கவி திருவாதிரை ஆகிய நிகழ்வுகள் சிறப்பானதாக கொண்டாடப்படுகிறது.
இந்த கோயிலின் சிறப்பு இந்த கோயிலில் அமைந்துள்ள நந்திதான். இந்த நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 200மீ தாண்டி மூலஸ்தானம் உள்ளது. இந்த நந்தி மீது பகலில் படும் ஒளி, அப்படியே உள்ளிருக்கும் தெய்வத்தின் மீதுபிரதிபலிக்கிறது.
மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்குகளையும் அணைத்துவிட்டாலும், வெளியில் இருக்கும் ஒளி பட்டு லிங்கம் ஒளிருகிறமாதிரி வடிவமைத்துள்ளார்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவைறையில் சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் லிங்கம் அமைந்துள்ளது. இது வெயில்காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் கதகதப்பையும் தரும் சிறப்பு கொண்டது.
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் நடை காலை 6மணி முதல் 12மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். பங்குனி திருவிழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 500குடம் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருமண பாக்கியம், குழந்தை, வேலை, கல்வி ஆகியவற்றுக்காக மக்கள் இங்கு நேர்ந்துக்கொள்கின்றனர். இங்கு அர்ச்சனை செய்வதும், வேட்டி, மாலை, புடவை சாற்றி வழிபடுவதும் நேர்த்திக்கடனாகும்.
மயிலாடுதுறையிலிருந்து 42கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். மயிலையிலிருந்து குட்டாலம், திருமணஞ்சேரி, பண்டனல்லூர், கஞ்சன்கொள்ளை வழியாக கங்கை கொண்ட சோழபுரத்தை அடையலாம்.