யாழ்ப்பாண கடற்கரையில் நடக்கும் சமூக விரோத செயற்பாடுகள்!

யாழ்ப்பாணத்தில் கடற்கரைகளில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் சிசிடீவி கமரா கட்டமைப்பு ஒன்றை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்கரைக்கு அருகில் நியமிக்கப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் குளியலறையை சிலர் உடைத்துள்ளதாக காரைநகர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு உட்பட சமூக விரோத செயற்பாடுகள் பல இங்கு முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் சேவையில் உள்ள போதிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகைத்தரும் நாட்களில், கடற்கரையின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக கடற்கரைக்கு அருகில் சிசிடீவி கமரா கட்டமைப்பு ஒன்றை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.