இம்முறை வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இன்னும் இரண்டு வருடங்களில் கல்வியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை தொடர்ந்து கல்வியை வழங்கும் 13 வருடங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெறாத மாணவர்களில், 14 ஆயிரம் பேருக்கு, தொழில்முறை கல்வி திட்டத்தின் கீழ் உயர் தரம் செல்லமுடியும்.
மேலும் அடுத்த வருடம் முதல் இவ்வாறான அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.