தமது மகளுக்கு தீ மூட்ட முற்பட்ட தந்தை ஒருவர் தொடர்பான செய்தி மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
10 வயதான குறித்த சிறுமிக்கு நேற்றைய தினம் பெற்றோல் ஊற்றி இவ்வாறு தீவைக்க அவர் முற்பட்டுள்ளார்.
தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த சிறுமி தமது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
தந்தைக்கு ஏற்பட்ட திடீர் கோபத்தை அடுத்து இவ்வாறு தீ மூட்ட முற்பட்டுள்ள நிலையில், பிரதேச மக்கள் அதனை அணைத்து சிறுமியை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை தெனியாய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.