தமிழகத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்த வாலிபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சென்னை ஆவடியில் வசித்து வந்தவர் பிரதீப்(27). ரியல் எஸ்டேட் தொழிலதிபராக வலம் வந்தவர்.
100 கிலோ எடையுடன் இருந்த பிரதீப், தன் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து வசந்துள்ளார்.
அந்த வகையில் நேற்று ஆவடி பகுதியின் சாலை ஓரத்தில் முறையான அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்.
உடல் எடை உடனடியாக குறையும் என்ற நம்பிக்கையில் வாங்கி சாப்பிட்ட பிரதிப்புக்கு, லேசான வயிற்று வலி ஏறப்ட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், நள்ளிரவில் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிராதீப், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் பொலிசார், முறையான அனுமதி இல்லாமல் லேகியம் விற்பனை செய்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், இது போன்ற ஆசை வார்த்தைகள் கூறி சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் லேகியங்களை வாங்க வேண்டாம் என்றும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.