ஏலியன்களின் பறக்கும் தட்டா ஒளிரும் விளக்குடன் சென்றது?… மலைத்து போன அமெரிக்க பைலட்டுகள்!- (வீடியோ)

வாஷிங்டன் : இரண்டு வெவ்வேறு விமானங்களின் பைலட்டுகள் அரிசோனா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று தங்களை கடந்து சென்றதை பார்த்துள்ளனர்.

அமெரிக்காவின் விமான நிர்வாகத்துறை இரண்டு பைலட்டுகளின் உரையாடலை வெளியிட்டுள்ளது.

அதில் இரண்டு பைலட்டுகள் தெற்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் மாகாண எல்லையை ஒட்டிய அரிசோனா பகுதியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தங்களுக்கு மேலே வானத்தில் ஒரு மிதக்கும் பொருள் கடந்து சென்றுள்ளதை பார்த்துள்ளனர்.
விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு விமானிகளின் உரையாடல்களை அமெரிக்காவின் விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முதலில் பீனிக்ஸ் ஏர் விமான பைலட் தான் ஒரு மிதக்கும் பொருளை பார்த்ததாக கூறி இருக்கிறார். இதனையடுத்து மற்றொரு விமானியிடம் உங்கள் கண்ணிற்கு ஏதேனும் தென்பட்டதா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த விமானி இல்லை என்று கூறி இருக்கிறார். இதனையடுத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானியிடம் இது குறித்து பீனிக்ஸ் விமான பைலட் கேட்டுள்ளார்.

அதற்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானி முதலில் இல்லை என்று கூறியவர் சற்று நேரத்தில் ஆம் என்னுடைய விமானத்திற்கு 2 அல்லது 3 ஆயிரம் அடி தூரத்தில் ஒரு வித்தியாசமான பொருள் பறந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இரண்டு விமானிகளுமே அந்த மிதக்கும் தட்டு தங்களது விமானத்தின் எதிர்திசையில் பறந்து சென்றதாக உரையாடலில் தெரிவிக்கின்றனர்.

இது ஏலியன்களின் பறக்கும் மிதவைத் தட்டா அல்லது வானிலை பலூன், ஏர்ஷிப் போன்ற ஏதாவது ஒன்றா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.

எனினும் வானிலை கண்காணிக்கும் பலூன் போன்ற ஏதாவது ஒன்றாக இருந்தால் இவ்வளவு உயரத்தில் பறக்காது என்பதும் விமானிகளின் கருத்து, அந்த பறக்கும் தட்டில் இருந்த ஒளிரும் விளக்கு அந்தப் பொருள் என்ன என்பதை அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்ததாகவும் விமானிகள் கூறியுள்ளனர்.