அம்மன் விக்கிரகத்தில் நாகபாம்பு!!

வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று (30.03.2018) இடம்பெற்று வருகின்றது.இன்று குறித்த ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுது திடீரென அங்கு தோன்றிய நாக சர்ப்பம் அம்மனின் சொருபத்தில் ஏறி ஆராதனை முடியும் மட்டும் காட்சியளித்துள்ளது.மேலும், ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டது.இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் குறித்த அதிசயத்தை காண்பதற்கு கோவிலுக்கு படையெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.