இரா.சம்பந்தனை எச்சரிக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள்!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல. முழு நாட்டுக்குமான எதிர்க்கட்சித் தலைவர்.

முழு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எதிர்க்கட்சித் தலைவரின் கடமை.

கடுமையான குற்றச்சாட்டுக்களுடன் கூடிய யோசனையை ஒன்றை தோற்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமாயின் கூட்டமைப்பு பாரதூரமான அனர்த்தத்தை எதிர்நோக்க நேரிடும்.

இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அத்துரலியே ரதன தேரர் நாளைய தினம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.