அப்பாவை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருகின்றோம்!

தங்களுடைய அப்பாவை விடுவிப்பதாக தெரிவித்துள்ள ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்திருக்கின்றதாகவும் புதுவருடத்தில் அப்பாவை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் அரசியல் தண்டணைக் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதியும் சிறைத் தண்டனைக் கைதியுமான சச்சிதானந்தம் ஆனந்தசுதாரனின் மனைவி அண்மையில் உயிரிழந்திருந்த நிலையில் அவருடைய மகன் தாயறுக்கான் இறுதிச் சடங்கை செய்ய அவருடைய மகள் தந்தையுடன் சிறைக்காவலரின் வாகனத்தில் ஏற முற்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.

அனைவரதும் மனதை உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆனந்தசுதாகரனான தகப்பனை விடுதலை செய்யுமாறு அவருடைய பிள்ளைகள் ஐனாதிபதிக்கும் ஐனாதிபதியின் மகளுக்கும் கடிதம் எழுதியிருந்தனர்.அதே நேரம் ஐனாதிபதிக்கு கருனை மனுவும் அனுப்பட்டதுடன் வடக்கு கிழக்கு கொழும்பு என பல இடங்களிலும் கையெழுத்தப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியிரந்தனர். இச் சந்திப்பு காலை 9 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் ஐனாதிபதியைச் சந்திப்பதற்கு அவருடைய பிள்ளைகள் 9.30 மணியளவிலேயே சென்றிருந்தனர்.

ஆயினும் பிள்ளைகளைச் சந்திப்பதற்காக ஐனாதிபதி நேரத்தையும் பொருட்படுத்தாது காத்திருந்து சந்தித்தாகவும் சந்திப்பிற்குச் சென்ற உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் இச் சந்திப்பின் போது புது வருடத்திற்கு முன்னதாக ஆனந்தசுதாகரனை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறியிருந்தார்.

இந் நிலையில்; யாழ் ஊடக மையத்தில் ஊடகங்களைச் சந்தித்த ஆனந்தசுதாகரனின் மகன் மற்றும் மகள் ஆகியோர் ஐனாதிபதிக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தங்களுடைய அப்பாவை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறியுள்ளமை தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் புதுவருடத்தில் தங்களது அப்பாவை பார்க்க தாங்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிள்ளைகள் குறிப்பிட்டிருந்தனர்.

இதே வேளை தங்களுக்காக தங்கள் அப்பாவின் விடுதலைக்கு பல வழிகளிலும் உழைத்த அனைத்துத் தரப்பினர்களுக்கும் தாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிள்ளைகள் கூறியுள்ளனர்.