தலைமைப் பதவியிலிருந்து வெளியேறுகிறார் ரணில்!! சஜித்திடம் கோரிக்கை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராக இருக்குமாறு, அதன் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய (வியாழக்கிழமை) செயற்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தின் பின்னர் சஜித்திடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜித், கட்சியில் ஏகமனதாக எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். சஜித் தொடர்ந்து குறிப்பிடும் போது;

‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் தமிழ் சிங்கள் புதுவருடத்தின் பின்னர் கட்சியின் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி மாத்திரமல்ல, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஊழல் மோசடியாக இருந்தாலும் அவற்றிற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பது அவசியம்.

ஊழலற்ற தூய்மையான நாட்டை உருவாக்கவே கடந்த 2015ஆம் ஆண்டு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றது. அதனை முன்கொண்டு செல்ல நாம் அனைவரும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்