அப்போது அவர் நடிகை ஸ்ரீ ரெட்டியின் விவகாரம் பற்றி நடிகரிடம் கேள்வி எழுப்பினார். திரையுலகில் புரோக்கர்களும், வேசிகளும் இல்லையாக்கும் என்று ராவ் கூறினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராவ் நடிகைகளை வேசிகள் என்று கூறியதை கேட்டு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கோபம் அடைந்துள்ளனர். மேலும் ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து டிவி5 சேனல் மன்னிப்பு கேட்டுள்ளது. ராவின் பேச்சை கேட்டு ரகுல் ப்ரீத் சிங் பொங்கி எழுந்துள்ளார்.
தற்போது எல்லாமே டிஆர்பி ஆகிவிட்டது. லிமிட்டை தாண்டி பேசிவிட்டார்கள். நல்ல காலம் என் பெற்றோருக்கு தெலுங்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள். இப்படிப்பட்ட திரையுலகிலா நம் மகள் இருக்கிறாள் என்று நினைப்பார்கள் என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
அந்த நபரை ஏன் இன்னும் வேலையை விட்டு நீக்கவில்லை?. இதுவே நான் யாராவது ஒரு பத்திரிகையாளரிடம் திமிராக நடந்து கொண்டிருந்தால் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்றார் நடிகை லட்சுமி மஞ்சு