ஜனாதிபதிக்கு அதிர்ச்சியளித்த பிரதமர் ரணிலின் அதிரடித் தீர்மானம்!!

பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முகம் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.எனினும், தான் இராஜினாமா செய்வதற்கு எந்தக் காரணம் இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

தான் தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றே பிரதமர் பதவிக்கு வந்ததாகவும், அவ்வாறு இராஜினாமா செய்ய வேண்டும் என்றால், ஏனைய அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என்பரே பிரதமர் நிலைப்பாடாக உள்ளது.என்ன கருத்துக்கள் வெளியிட்டாலும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம் கொடுத்து அதனை வெற்றி கொள்வதற்கு பிரதமர் நோக்கமாக உள்ளதாக கொழும்பு அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.