சீனாவில் காதலி இல்லாத ஆண்களுக்காக திறக்கப்பட்ட கடை ஒன்றில் ஆண்கள் கூட்டம் அலை மோதியுள்ளது.
சீனாவின் Heyuan பகுதியில் உள்ள Vitality City ஷாப்பிங் காம்ப்ளக்சில் 15 இளம் மொடல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அருகில் QR கோடு மற்றும் ஒவ்வொருவருக்கும் பக்கத்தில் நம்பர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், காதலி இல்லாத ஆண்களுக்காக இது பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது.
அதாவது இங்கு 15 மொடலிங் பெண்கள் உள்ளனர். காதலி இல்லாத ஆண்கள் இங்கு வந்து இருக்கும் 15 பெண்களில் ஒரு பெண்ணை தெரிவு செய்து அவருடன் இந்த ஷாப்பிங் மாலில் எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம், அவருக்கு எது என்றாலும் வாங்கிக் கொடுக்கலாம்.
அவரும் உங்களுடன் சகஜமாக பழகுவார். தனிமையில் இருக்கும் ஆண்களுக்கு இது ஒரு வித மாற்றத்தை கொடுக்கும் எனவும், அப்படி அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்கு அவர்கள் வாடகையாக 3 யென் கொடுக்க வேண்டும் அதுவே 20 நிமிடத்திற்கு 1 யென் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர்கள் அந்த பெண்களின் பக்கத்தில் இருக்கும் QR கோடை பயன்படுத்தி பணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தினங்களே இந்த ஆபர் என்பதால், அங்கு ஆண்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. அதில் ஒரு சிலர் வாடகைக்கு தாங்கள் எடுத்த பெண்களுடன் ஜாலியாக ஷாப்பிங் காம்ப்ளக்சில் வலம் வருவது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் ஒரு கண்டிசன் வேறு உள்ளது. வாடகைக்கு வரும் பெண்களிடம் உடல் அளவில் எந்த தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற கண்டிசன் உள்ளது.
இதே போன்று Haikou-வின் Friendship Commercial Plaza -வில் 6 அழகான ஆண்கள் சமீபத்தில் வாடகைக்கு விடப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மணிநேரத்திற் 1 யென் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.