ஜேர்மனியில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய மார்பகத்தை அழகாக்க பிளாஸ்டிக் அறுவகை சிகிச்சை செய்ததால், தற்போது அவருடையை பொலிசாகும் கனவு கேள்வி குறியாகியுள்ளது.
ஜேர்மனியின் பெர்லின் பகுதியைச் சேர்ந்தவர் Chantal(32). இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பொலிஸ் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். எழுத்துத் தேர்வில் தேர்ச்சியும் ஆகியுள்ளார்.
பொலிஸ் ஆவதே கனவாக கொண்டுள்ள இவரை, அதிகாரிகள் உடல் பரிசோதனை செய்த போது மார்பகத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதை அறிந்துள்ளனர். இதனால் பலப் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி அவரை நிராகரித்துள்ளனர்.
இதனால் பெரிதும் விரக்தியடைந்த Chantal நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளார். அப்போது அவர் மார்பகத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் எந்த ஒரு பாதிப்பும் வராது என University of Bonn அளித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதன் பின் பெர்லின் பொலிசாருக்கு Chantal பொலிஸ் ஆவது குறித்து மறுபரீசிலனை செய்யும் படி உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் வேலை மறுக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், பணியின் போது திடீரென்று உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும், என்பதால் அவருக்கு பொலிஸ் வேலை மறுக்கப்பட்டது.
தற்போது நீதிமன்றம் மறுபரீசிலனை செய்யும் படி தெரிவித்துள்ளதால், அவரது உடல் நலம் ஆகியவை குறித்து சோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் நான் பொலிஸ் வேலைக்கு தகுதியானவள் என்னுடைய திறமையை நிரூபிப்பேன் என்று Chantal கூறியுள்ளார்.