சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதற்கு நாம் அனைவருமே இரவு நேரத்தை தான் பயன்படுத்துக் கொள்வோம்.
எனவே அந்த இரவு நேரத்தில் இயற்கையாக உள்ள சில ஃபேஸ் பேக்குகள் போட்டு வந்தால் கருப்பான நம் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.
வாழைப்பழ மாஸ்க்
ஒரு பௌலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து, அதை முகம் கழுவி விட்டு, முகத்தில் தடவி, 30-45 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பால் மற்றும் தேன் மாஸ்க்
தேனை பாலுடன் சேர்த்து கலந்து அதை சருமத்தில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று அழகாக தோற்றமளிக்கும்.
பாதாம் மாஸ்க்
பாதாமை நீரில் பகல் நேரம் முழுவதும் ஊற வைத்து எடுத்து கொண்டு அதை இரவில் பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 1 மணிநேரம் கழித்து கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சரும வறட்சி வராமல் தடுக்கும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்
வெள்ளரிக்காய் சாறு, தர்பூசணி சாறு, தயிர் மற்றும் பால் பவுடர் ஆகிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் கழுவ வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள கருமை, அழுக்குகள் நீங்குவதோடு, சரும சுருக்கங்களும் அகலும்.
கடலை மாவு மாஸ்க்
ஒரு பௌலில் கடலை மாவு, எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர், மஞ்சள் தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவி 1 மணிநேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு மாஸ்க்
ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள் ஆகிய அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து 40-45 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
இப்படி இரவு நேரத்தில் போட்டு வந்தால், வெயிலால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் சரியாகி, சருமத்தின் பொலிவு மற்றும் நிறம் அதிகரிக்கும்.