தூக்கில் தொங்கிய மாணவியின் உருக்கமான கடிதம்!

இந்தியாவில் 14 வயதான பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கர்கர் நகரில் வசித்து வரும் 14 வயதான மாணவி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டு மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு, அதனருகில் இருந்த கடிதத்தை எடுத்தார்கள்.

கடிதத்தில், கடந்த 27-ஆம் திகதி வந்த இறுதி தெரிவு முடிவுகளில் மூன்று பாடங்களில் தோல்வியடைந்து விட்டதால் மனஅழுத்தத்தில் உள்ளேன்.

இதனால் என் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.