விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் மரணம்!

விடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாலன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் 1999ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

பல நாடுகளில் தங்கியிருந்தவர் பின்னர் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளார். அவர் தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளார்.

குணாலன் மாஸ்டர் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர் பெயர் பட்டியலிலும் உள்ளார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிட்சர்லாந்து Basel மாநிலத்தில் மரணமடைந்துள்ளார்.

இவர் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்நுட்ப வல்லுநரான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்.

1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுகளின் சாட்சியங்கள் இவரால் பதிவு செய்யப்பட்டன.

இறுதிக்காலம் வரை இவர் பணியாற்றினார்.

சுவிஸ் – ஜெனிவா மனித உரிமை அமர்வில், தமிழினத்திற்கு சிங்கள அரசால் இளைக்கப்பட்ட அநீதியை வாக்குமூலமாக வெளிப்படுத்தியவர்.

சிங்களப் படைகளில் அட்டூழியங்களின் சாட்சிகளில் ஒருவராக அவர் தன்னை வெளிப்படுத்தினார்.

தற்போதைய காலத்தில் இவரது இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.