மலையகத்தில் என்னடா நடக்கின்றது.? உங்களில் ஒருவர் உங்களுக்காக ஒருவர்,தல, தளபதி,தன்மான சிங்கம்,தனிஒருவன்னு தூக்கி வச்சி கொண்டாடி நமக்குள்ளாக வாக்குவாதப்பட்டோமே
இப்போ ஒரு பிள்ளையின் தந்தை, தோட்டத்தொழிலாளி,வருமையான குடும்பஸ்தர் திரு.எஸ் அரவிந்த குமார் நேற்று தோட்ட முகாமையாளரால் தாக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்டு அவரது கடும் முயற்சி,உயிர் பயத்தின் காரணமாக தப்பித்து இன்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்போ எங்க போனீங்க மலையக மாணிக்கங்களா?
திரு.எம். மூர்த்தி டொரிங்டன் தோட்டத்தில். கங்காணியுடனான வாய்தர்க்கத்தில் வேலை நிறுத்தப்பட்டு இன்றுவரை வேலை வழங்கப்படாத நிலையில் இன்று கொழுந்து அளவிடும் இடத்தில் தனது 09 வயது வாய் பேச முடியாத மகனுடன் மண்ணென்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.எப்படியோ அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவ்விடயம் மலையக பிரதிநிதி என சொல்லப்படும் எவருக்கும்,இதுவரை தெரியாதா?ஒரு வார்த்தை இவ்விடயம் தொடர்பாக எவனும் வாய் திறக்கவில்லை மூன்று உயிர்கள் போயிருந்தால் வந்து மலர்வளையம் வைத்துவிட்டு தங்கள் செல்வாக்கை உறுதிபடுத்தி விட்டு சென்றிருப்பார்கள்.
கேவலம் ஒரு தொழிலாளிக்கு வேலை பெற்று தர முடியாத நீங்கள் எந்த தைரியத்தில் மேடை ஏறுவதையும் உங்கள் பெருமைகள் பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளீர்கள்?
இனி மேடை ஏறுவதற்கு முன், உங்கள் வாய்களை திறப்பதற்கு முன் ;ஒரு தொழிளாலரை மேடை ஏற்றி அவனுக்கு நீங்கள் இதுவரை செய்துள்ள ஒரு நல்ல விடயத்தை உண்மைத்தன்மையுடன் முன் வைக்க கூறி பாருங்கள் உங்கள் வண்டவாளங்கள் உங்களுக்கே தெரியவரும் இனியாவது திருந்துங்கடா.
இல்லாவிட்டால் இவ்வளவு நாட்கள் கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு தயவுசெய்து மலையகத்தை விட்டு ஓடிருங்கள் என மலையக மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.