பெண்களை கொலை செய்து உறுப்புகளை வெட்டி வீசும் சைக்கோ கொலைகாரன்!

சீனாவில் பெண்களை கடத்தி கொலை செய்த சைக்கோ கொலைகாரனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கயோ செங்க்யாங்க்(53). இவன் பெண்களைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளான்.

1988-ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த சைக்கோத்தனமான கொலையை செய்ய ஆரம்பித்துள்ளான். சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை வீடு வரை பின்தொடர்ந்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்வதை கயோ வழக்கமாக வைத்துள்ளான்.

பெண்களைக் கொள்வதோடு நின்றுவிடாமல் அவர்களின் உடல் உறுப்பு பாகங்களை வெட்டி வீசுவது போன்ற சைக்கோத் தனத்தையும் செய்துள்ளான்.

கன்சூ மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் கயோ 1988 முதல் 2002 வரை தன்னுடைய சீரியல் கொலைகளை அரங்கேற்றியுள்ளான்.

இதையடுத்து பொலிசார் கொலை செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களையும் கயோவின் டிஎன்ஏ மாதிரியை சோதித்துப் பார்த்தில் இவன் தான் கொலையாளி என்பதை உறுதி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்தனர்.

11 பெண்களை கடத்தி கொலை செய்துள்ள இவன் சமுதாயத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக இருப்பதால் அவன் தண்டிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்து அவனுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.