தெலுங்கானாவில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பொலிசாரை காப்பாற்றாமல் அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக, சாலையின் எதிரே இருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அதிகவேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியதால், லாரிக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மக்கள் அவரை காப்பாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்காமால் இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவரை வீடியோ எடுத்துள்ளனர்.
அதன் பின் இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக அங்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பொலிசார் வரும் வரை காத்திருக்காமல் அங்கிருந்த மக்கள் யாரேனும் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தால், அவர் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.