அளவுக்கு அதிகமாக பால் தேனீரை அதாவது ரீயைக் குடிப்பதனால் சோர்வு,இதயத்துடிப்பு அதிகரிப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.கோப்பியில் உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம்.இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். காஃபின், தேநீரில் குறைவாகவும் கோப்பியில் அதிகமாகவும் இருக்கின்றது. இது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மைகொண்டது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோப்பி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
ஒரு கோப்பை கோப்பியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். டீயில் இருக்கும் கேஃபைன் நம் உடலுக்கு நன்மை பயக்கிறது. ஆனால், இது அதிகளவில் சேரும் போது பல்வேறு உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்திடும்.
சோர்வு,இதயத்துடிப்பு அதிகரிப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.ஒரு நாளில் அதிகப்படியான டீ குடித்து வந்தால், உங்களுக்கு தொடர்ந்து ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் உண்டாகலாம். மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பீர்கள்.
இது மிகவும் ஆபத்தான நோய். டீ தொடர்ந்து அதிகமாக குடித்து வந்தால் இந்த நோய் ஏற்படக்கூடும். டீயில் அதிகப்படியான ஃப்ளோரைட் இருக்கிறது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் ஃப்ளோரைட் டாக்ஸிட்டி ஏற்படக்கூடும். இதனால், எலும்புகளில் வலி,எலும்புகள் தேய்மானம் ஆகியவை ஏற்படக்கூடும்.இது கொஞ்சம் அரிய வகையானது தான். ஐஸ் டீ அதிகமாக குடித்து வந்தால் இப்பிரச்சனை ஏற்படக்கூடும். கிட்னியில் கற்கள் வருவது, கிட்னி செயலிழந்து போவது ஆகியவை உண்டாகும். ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக பத்து டீ பதினைந்து டீ என்று குடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை உண்டாகிறது.ஒவ்வொரு முறை டீ குடித்ததும், டீ யில் இருக்கக்கூடிய கேஃபைன் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
இதனால், பசியும் மட்டுப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இந்த அமிலம் அதிகரித்து சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் அல்சர் பாதிப்பு ஏற்படக்கூடும்.டீயில் இருக்கும் கேஃபைன் அதிகப்படியாக உடலில் சேர்ந்தால் அது டியூரிட்டிக் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்திடும். இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இரவில் தூக்கத்தின் போது அடிக்கடி சிறுநீர்கழிக்கச் செல்வதால், ஆழ்ந்த உறக்கம் இருக்காது. தூங்கும் நேரம்,எழும் நேரம் என எல்லாமே பாதிக்கப்படும்.
தூக்கமின்மையினால் வரக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளும் மெல்ல வந்து சேரும்.அதிகப்படியாக டீ தொடர்ந்து குடித்து வந்தால், இரும்புச் சத்து நம் உடலில் சேரவிடாது. இதனால் ரத்த சோகை ஏற்படக்கூடும். இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுக்கிறது.
டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால், சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.