ராஜஸ்தான் மாநிலத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1 மாத குழந்தை மீது ஆசிட் ஊற்றிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியன்ஷ் என்ற குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால், அக்குழந்தை மீது ஆசிட் ஊற்றினால் உடல் நலம்பெற்று குணமாகிவிடும் எனக் கருதி ஆசிட்டை அக்குழந்தை மீது ஊற்றியுள்ளார்.
அக்குழந்தையின் உடல் பாதிக்கப்பட்டதையடுத்து, அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையின் உடல் எரிந்திருப்பதை பார்த்த செவிலியர்கள், இதுகுறித்து தாயிடம் விசாரிக்கையில் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், இதுகுறித்து பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் இதுகுறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.