யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கிளையைத் திறப்பதற்கு நல்லிணக்க செயலணியின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாண வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.வடமாகாணசபையின் விவசாய அமைச்சினால் காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவக் கிளையைத் திறப்பதற்கே சந்திரிகா இன்று வருகிறார். மூன்று நாள்கள் பயணமாக வரும் அவர் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உட்பட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர். தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை அரியாலை மருதங்கேணி, காரைநகர், உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கொள்ளவுள்ளார்.
அதே போன்று, மறு நாள் திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சென்று அங்கும் பல்வெறு இடங்களில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.