பெண் உறுப்பினர் ஊடகவியலாளருக்கு கூறிய பதிலால் பெரும் சர்ச்சை!!

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவாகிய பெண் உறுப்பினர் ஒருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான தெரிவாகியுள்ள உங்களது எதிர்காலத் திட்டங்கள் என்ன என பெண் உறுப்பினரிடம், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த குறித்த பெண் உறுப்பினர் ‘தந்தையிடம் கேட்டுதான் சொல்ல வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டி சபை அமைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வு ஒன்றின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றமொன்றில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.