ஹெரோயின் குளிசைகளை விழுங்கி வந்த நேபாளப் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!!!

நேபாளத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் குளுசைகளை விழுங்கி கடத்தி வந்த நேபாள பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 42 வயதான நேபாள பிரஜை ஆவார்.குறித்த சந்தேக நபர் ஹெரோயின் குளுசைகளை விழுங்கி நேபாளத்திலிருந்து பாகிஸ்தான் சென்று அங்கிருந்து துபாய்க்கு சென்று துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த போதே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மினுவாங்கொடை நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்திய போது  நீதவான் வைத்தியசாலையில் அனுமதித்து சத்திர சிகிச்சையின் மூலம் ஹெரோயின் குளுசைகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்

நீதவானின் உத்தரவிற்கமைய கைது செய்யப்பட்டவருக்கு மேற்கொண்ட சத்திர சிகிச்சையின் மூலம் 8 ஹெரோயின் குழுசைகள் அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை போதைத்தடுப்பு பிரிவனர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.