சவுதி அரேபியாவில் தந்தையின் இறந்த செய்தியை கேட்டு, இளைஞன் ஒருவர் நிகழ்ச்சியை உதறிவிட்டு ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் Bedaya என்ற தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக Ibrahim Al Awad என்ற இளைஞர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி சென்று கொண்டிருந்த போது Ibrahim Al Awad-ன் தந்தை இறந்த தகவல் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது உடனடியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் அவரிடம் உங்கள் தந்தை இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் அந்த இளைஞர் என்ன செய்வது என்றே தெரியாமல் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் ஓடியுள்ளார்.
இது தொடர்பான காட்சியை அந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்ததால், பல்வேறு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதைக் கண்ட பலர் அவரின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல் இப்படியா ஒளிபரப்பு செய்வது என்று வசைபாடியுள்ளனர்.
இது குறித்து தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், இது குறித்து தன்னிடம் எந்த ஒரு அனுமதியும் வாங்காமல் அவர்கள் ஒளிபரப்பு செய்துவிட்டார்கள்.
இது ஒரு முட்டாள்தனமானது. ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, மற்றவர்களின் உணர்ச்சியை மதிக்க வேண்டும், இந்த செயலில் ஈடுபட்ட சிலரை இடைநீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் Ibrahim Al Awad தந்தையின் இறந்த தகவலை கேட்டவுடன், தாங்கமுடியாமல் உடனடியாக நிகழ்ச்சியை விட்டு அழுத படி ஓடியுள்ளார்.