சிரார்த்தங்கள் முடிந்தபின் பிண்டங்களை பசுவிற்கு வைப்பது சரியா?

இந்துக்கள் இறந்துபோன முதாதையர்கள் உறவினர்களிற்கு திதி கொடுப்பார்கள். அப்படி திதி கொடுக்கும்போது சிரார்த்தங்கள் முடிந்தபின் அங்கு வைக்கப்படுகின்ற பிண்டங்களை அனேகமானவர்கள் பசுவிற்கு கொடுப்பார்கள்.

இது சரியா தவறா என பலபேரிற்கு தெரியாது. உண்மையில் சிரார்த்தங்கள் முடிந்தபின் அந்த பிண்டங்களை பசுவிற்கு கொடுக்க கூடாதாம். பின் அதனை என்ன செய்யவேண்டும்?

அன்றைய தினம் அதாவது சிராத்த நாள் அன்று பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வேண்டுமானால் கொடுக்கலாம்.

சிராத்தத்தின்போது வைத்த பிண்டங்களை நீர்நிலையில் கரைப்பதே சிறந்தது. கிணறு, ஆறு, ஏரி, குளம், கடல் முதலான நீர்நிலைகளில் மட்டுமே பிண்டங்களைக் கரைக்க வேண்டும். சரியான முறையும் அதுவே.

அதற்குரிய வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் பூமியில் சிறிய குழி தோண்டி, அதில் பிண்டங்களை நீர் ஊற்றி கரைத்தபின்பு குழியை மூடிவிட வேண்டும்.

அந்த இடம் நாய், எலி முதலானவை வராத இடமாக இருக்க வேண்டும். முடிந்தவரை நீர்நிலையில் பிண்டங்களைக் கரைப்பதே சாலச்சிறந்தது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.