மன்னார் – வவுனியா பிரதான வீதியின், பிரமனாயங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.மன்னாரில் இருந்து நேற்று மாலை வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து கட்டுப்பாட்டையிழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது.இதனையடுத்து பேருந்து காட்டுப்பகுதியை நோக்கி 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்து நேர்ந்துள்ளது.குறித்த விபத்தில் பயணிகள் சிறுகாயங்களுடன் தப்பியுள்ள நிலையில், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரமனாயங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்திற்கு தனியார் மற்றும் இ.போ.ச பேருந்தின் போட்டித்தன்மையே காரணமென பேருந்தில் பயணித்த பயணிகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.