கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய ஊழியர்களினால் இன்றைய தினம் நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக விமான நிலைய பகுதியில் கலகம் அடக்கும் பாதுகாப்பு பிரிவு குவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் விமான படை கொமான்டோ ரெஜிமென்டில் 1500 பேர் பாதுகாப்பிற்றாக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விமான நிலையில் ஊழியர் சபையின் சம்பளத்தை 10000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சிவில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சம்பள அதிகரிப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.