தமிழகத்தில் மகனின் நிலையால் அவன் எப்போது என்னை அப்பா என்று அழைப்பான் என்று தந்தை காத்து கொண்டிருக்கும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமீன். பாம்பை பிடித்து வனத்திற்குள் பத்திரமாக விடும் வேலையை செய்து வரும் இவருக்கு முஸ்தாக்(12), அபீஸ் அகமது மற்றும் ரெஸ்மியா பானு என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவரது மகன் முஸ்தாக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று வலிப்பு வந்து மயங்கி விழுந்தான்.இதனால் அவனது தாய் அவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்து பார்த்த போது மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 18 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியை செய்து வரும் அமீனுக்கு பெரிய அளவில் வருமானம் இல்லை.அதற்காக அவர் யாரிடமும் இதுவரை பணம் கேட்டு நின்றதில்லை. சமீபத்தில் சிறுவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ததால் அவன் தேறிவருவதாக கூறப்படும் நிலையில், மகனின் நிலைமை குறித்து அமீன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ”நன்றாக படிப்பான், கராத்தேவில் நிறைய மெடல்கல் எல்லாம் வாங்கியிருக்கிறான். என் குடும்பத்தில் நான் பாம்பு புடிக்கிற தொழில் பிடிக்காது, ஆனால் அவன் மட்டும் எனக்கு ஆதரவாக இருந்து, சீக்கிரம் போய் அந்த பாம்பை பிடிங்க என்று கூறி அனுப்பி வைப்பான்.’
ஆனால், கடந்த இரண்டு வருடமாக முடங்கிக் கிடக்கிறான். திடீர்னு வலிப்பு வரும். இதன் காரணமாகவே அவனை விட்டுட்டு, நாங்கள் எங்கேயும் போவதில்லை, தற்போது தலையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால், அவனுக்கு எந்த நேரத்திலும் நினைவு வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடைசியாக அவன் என்னிடம் ”அப்பா ரெம்ப தலை சுத்துதுப்பா” என்று கூறி முடங்கியவன் தான், கடந்த இரண்டு வருடமாக முடங்கி கிடக்கிறான்.மீண்டும் அவன் நல்ல படியாக எழுந்து அப்பா என்று கூப்பிடுவானா? என்று காத்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அவன் கூப்பிடுவான் என்ற நம்பிக்கையில் உள்ளார்.