பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் அழகி! – (வீடியோ)

சென்னை : தமிழ் சினிமாவில், ‘யுனிவர்சிட்டி’ என்ற படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. படம் ஹிட்டாகாததால் தமிழில் ஒரு படத்தோடு மூட்டை கட்டிக்கொண்டு இந்தி படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் திடீரென்று ப்ளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து 3டியில் உருவான, ‘காமசூத்ரா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சில காட்சிகள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் பல்வேறு பிரச்னைகளால் அந்தப் படம் ட்ராப் ஆனது.

இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரசிகர்களைக் கவர்வதற்காக சமீபமாக கவர்ச்சிகரமான புகைப்படங்களாகப் பதிவேற்றி வருகிறார் ஷெர்லின்.

ஷெர்லின் சோப்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெறும். அப்படி அவர் சமீபத்தில் ஆடையே இல்லாமல் ஒரு டெடி பியருடன் வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பும், சில நாட்களாக மிகவும் கவர்ச்சியான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ஷெர்லின் சோப்ரா. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கும் இறங்குவார் போல முணுமுணுக்கிறது சினிமா வட்டாரம்.