யாழ் போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் முக தாடை வாய் சத்திர சிகிச்சைப் பிரிவானது முக தாடை சம்பந்தமான நோய்களையும் குறைபாடுகளையும் கண்டறிவதுடன் அதற்குரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இதனடிப்படையில்…
1. பிறப்பிலிருந்து வருகின்ற குறைபாடுகள்
2. முக அமைப்பு சீராக்கல் – தாடை அமைப்பு , காது அமைப்பு, நெற்றியின் அமைப்பு
3. கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் அகற்றல்.
4. விபத்துக்களால் ஏற்படுகின்ற முக தாடை என்பு உடைவுகளை சீரமைப்புச் செய்தல்
5. பாரிசவாத நோயால் முகத்தசைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளை சீராக்கல்
போன்ற பல சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு சேவையாக முக தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இதில் பயன்பெற விரும்புவோர் யாழ் போதனா வைத்தியசாலை முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் (OMF Unit) கிழமை நாள்களில் நேரடியாகவும் மற்றும் 0779938324 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம போதனா வைத்தியசாலை பணிப்பாளா் அறிவித்துள்ளார் .(15)