சுசி லீக்ஸை தொடர்ந்து நடிகர்கள், தயாரிப்பாளர்களை நடுங்க வைத்த ஸ்ரீ லீக்ஸ்

பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைத்து மோசம் செய்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் முகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் பட உலகை ‘சுசி லீக்ஸ்’ கடந்த வருடம் உலுக்கியது. இதில் நடிகர்-நடிகைகளின் ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியானது.

மதுகோப்பையுடனும் படுக்கையிலும் நடிகர்-நடிகைகள் நெருக்கமாக இருக்கும் படங்கள், நடனம் ஆடும் வீடியோக்கள், ஆடையில்லாமல் இருக்கும் ஆபாச படங்கள் போன்றவையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை தடை செய்யும்படி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதேபோன்று தற்போது தெலுங்கில் ‘ஸ்ரீ லீக்ஸ்’ என்ற பெயரில் பேஸ் புக்கில் ஆபாச படம் வெளியாகி தெலுங்கு நடிகர்களை அதிர வைத்துள்ளது.

இதில் பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நாசம் செய்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடப்போவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைப்பது தெலுங்கு பட உலகில் பரவலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

நடிகர்களின் பெயர்களை வெளியிடாமல் நடிகைகள் பலர் இதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீ லீக்சில் ஆதாரத்துடன் நடிகர்கள் படங்கள் வெளியாகும் என்று அறிவிப்பு வந்ததால் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நடிகை ஸ்ரீ ரெட்டியுடன் தெலுங்கு நடிகர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தெரியாமல் நெருக்கமாக இருந்த படங்களை ஸ்ரீ ரெட்டி வீடியோவில் படம்பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

DZlVZwWVQAUr56S.jpg large  சுசி லீக்ஸை தொடர்ந்து நடிகர்கள், தயாரிப்பாளர்களை நடுங்க வைத்த ஸ்ரீ லீக்ஸ் DZlVZwWVQAUr56Sபட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைத்து மோசம் செய்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் முகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். ஒருவரது படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் முன்னணி தெலுங்கு நடிகர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

ஸ்ரீ லீக்சில் தங்கள் படங்கள் வெளியாகாமல் தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அரசியல் பிரமுகர்களை வைத்து நடிகை ஸ்ரீரெட்டியை அவர்கள் மிரட்டுவதாகவும் பேரம்பேசுவதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.