ஒருபக்கம் உடல் பருமனானவர்கள் ஒல்லியாக வேண்டுமே என மாய்ந்து டயட் செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒல்லியானார்கள் என்னென்னவோ சாப்பிட்டும் உடல் ஏறவில்லையே என கவலைப் படுவதுண்டு. இக்கரைக்கு பச்சை என்பது போலத்தான்.
உடல் எடை ஏறாமல் இருப்பது ஒரு வரம் என்றாலும் மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு கேலி கிண்டல்களுக்கு பஞ்சம் இருக்காது. போஷாக்கின்றி ஓடிசலாக இருப்பது நன்றாக இருக்காது. கன்னங்கள் ஒட்டி முகத்தில் வயதான களை உண்டாகும். எந்த ட்ரெஸ் போட்டாலும் சோளக்காட்டு பொம்மைக்கு போட்டது போலத்தோன்றும்.
உடல் ஒல்லியாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சரியான உணவை தேர்ந்தெடுக்காததே. டயட் தவிர்த்து உடலில் ஏதாவது பிரச்சனைகள், தைராய்டு நோயின் அறிகுறி, வயிற்றில் பூச்சி, கல்லீரல் பாதிப்புகள், சர்க்கரை நோய், என பலவும் காரணங்கள் இருக்கலாம்.
அதற்காக துரித உணவுகளையோ, ரெடிமேட் நொறுக்குத் தீனிகளையோ தேடதீர்கள். இவை மோசமானவை.
உடல் எடை குறைக்கவும் , அதிகரிக்கவும் உதவும் உணவுகள் உண்டு. உணவின் மூலமாகவே பல நோய்களையும் குணப்படுத்தலாம். அப்படித்தான் இந்த மெலிந்த் உடல் பிரச்சனையையும் போக்கிடலாம். ஒல்லிப்பிச்சான் உடலை போஷாக்காய் மாற்ற உதவும் உணவுகளை இந்த கட்டுரையில் காணலாம்.
அத்திப் பழம் :
அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிடவேண்டும். தினமும் இப்படி 2 ஊற வைத்த அத்திப் பழங்களை சாப்பிட்டால் 20 நாட்களில் வித்தியாசத்தைக்
காணலாம்.
உளுந்து :
ஒல்லியாக இருப்பவர்கள் உளுந்தை நிறைய உடலுக்கு சேர்த்துக் கொண்டால் மிக எளிதாக உடல் குண்டாகும். உளுந்து வடை, உளுந்து இட்லி, உளுந்து துவையல் என சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் போஷாக்கு பெறுவீர்கள்.
வெந்தயம் :
வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து ஒரு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே உடல் பூரிப்பு உண்டாகும்
உலர் திராட்சை :
தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். சாதரண திராட்சையை விட 8 மடங்கு அதிகமாக குளுகோஸ் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்
கொண்டைக் கடலை :
தினமும் ஊற வைத்த கொண்டைக் கடலையை சாப்பிட்டு வர வேண்டும். 10- முதல் 15 வரை கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும். இவை புரதம்
அதிகம் உள்ளது. உஇவை சதைப் பிடிப்பை உடலுக்கு அளிப்பவை.
எள்ளு :
எள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது உட்ல எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என எள்ளிய தொடர்ந்து உண்வைல் சேர்த்துக் கொள்ளுங்கள்