சமையல் முன் அறிவிப்பு உங்கள் வாழ்வில் அவசியம்!

உணவை சமைப்பதற்கு முன்பாக கழுவிவிட்டுத் தான் சமைக்க வேண்டும் என கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இந்த நான்கு பொருட்களை மறந்தும் கூட கழுவ வேண்டாம். மற்ற உணவுகளுக்கு இதனால் பக்டீரியா பரவுகின்றதாம்.

முட்டை

நாம் கடைகளில் வாங்கும் முட்டைகளில் பக்டீரியா பரவுவதை தடுக்கும் வண்ணம் உடலுக்கு கெடுதல் விளைவிக்காத ரசாயனம் தடவப்பட்டிருக்கும், சமைக்கும் முன் இதை கழுவினால் இந்த பாதுகாப்பு அடுக்கு தண்ணீரில் கரைந்துவிடும், இதனால் பக்டீரியா வளர்வதுடன் மற்ற உணவுகளிலும் பரவுகிறது.

காளான்

காளான் தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது, இதை கழுவும் போது தண்ணீரை உள்ளிழுப்பதால் விட்டமின் சத்துக்கள் கரைந்துவிடும், அசுத்தமாக இருப்பின் தண்ணீர் ஒருமுறை முக்கி எடுக்கலாம்.

பாஸ்தா

பாஸ்தாவை தயாரிக்கும் நிறுவனம் அதன் ருசிக்காக சில பொருட்களையும், ஸ்டார்ச் (மாவு) பொருட்களையும் சேர்த்திருக்கும், தண்ணீரில் இதை கழுவும் போது கரைந்துவிட்டால் ருசி இல்லாமல் போகலாம்.

கறி

நாம் பக்டீரியாக்களை நீக்க கறியை கழுவினாலே சிறந்தது என நினைக்கிறோம், அது தவறு, தண்ணீரில் பக்டீரியாக்கள் வளருமே தவிர குறையாது. குறைந்த சூட்டில் தண்ணீரில் வேக வைப்பதே சிறந்தது.