’90 லட்ச ரூபாய் ஊதியத்தை ஏன் திருப்பித் தந்தீர்கள் சச்சின்?’

மாநிலங்களவை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், மொத்த ஊதியமான 90 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

கிரிக்கெட்டில்கூட அணியில் இடம் பெற்றால், போட்டியில் விளையாடாவிட்டால்கூட சம்பளத்தை யாரும் மறுப்பதில்லையே? 90 லட்சம் என்பது குறைவானத் தொகை அல்லபாகிஸ்தான் ரூபாயின் மதிப்பில் அது ஒரு கோடியே 60 லட்ச ரூபாய்க்கு சமமானத் தொகையாகும். மக்கள் பணம் இது என்பதால் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா?

நீண்ட காலமாக விக்கெட்டில் நின்று ரன் எடுக்காமல் வெறும் தடுப்பாட்டம் ஆடுவதற்காகவா நீங்கள் அந்த உன்னத இடத்திற்கு சென்றீர்கள்? சரி, போயாயிற்று, ஆனால் களத்தில் இறங்கிய பிறகு, ஆட்டக்காரருக்கு கொடுக்கப்பட்ட ஊதியத்தை ஏன் திரும்பக் கொடுத்தீர்கள் டெண்டுல்கர்?

_100656586_889b935f-f56c-48fc-8b91-8b2a293cd505  '90 லட்ச ரூபாய் ஊதியத்தை ஏன் திருப்பித் தந்தீர்கள் சச்சின்?' 100656586 889b935f f56c 48fc 8b91 8b2a293cd505

பிரதமர் தேசிய நல நிதியம்

மாநிலங்களவை அல்லது பாகிஸ்தானின் செனட்டில் நிறைய உறுப்பினர்கள் பெயரளவிலேயே பதவியில் இருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் மட்டுமே செயல்படாத எனக்கு எதற்கு ஊதியம் என்று எண்ணி அப்படியே பிரதமரின் தேசிய நல நிதியத்தில் சேர்த்துவிட்டு வெறும் கையுடன் திரும்பச் சென்றுவிட்டீர்கள்.

ஆனால் இப்போது இப்படி செய்வதற்கு பதிலாக இந்த பதவி வேண்டாம் என்று முன்னரே மறுப்புத் தெரிவித்திருந்தால், இந்த பதவிக்காக தவம் இருக்கும் வேறு யாருக்காவது பயன் கிடைத்திருக்குமே?

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனதில் முடிசூடா மன்னனாக இடம் பெற்றிருக்கும் நீங்கள் வெறும் 90 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்ததால் உங்களுக்கு என்ன பெரிய பெருமை கிடைத்துவிடப் போகிறது?

ஊதியத்தை திருப்பிக் கொடுத்ததால் தொலைகாட்சி சேனல்களின் ஒரு நாள் டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமாக உதவியதைத் தவிர யாருக்கும் எந்த பயனும் இல்லை.

செயல்படாமல் இருக்கும் வேறு எம்.பிக்கள் யாராவது எம்பிக்குதித்து முன்னால் வந்து தங்கள் சம்பளத்தையும் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

_100656810_8e95fd0e-dea3-44b4-b357-c459a6ceff32  '90 லட்ச ரூபாய் ஊதியத்தை ஏன் திருப்பித் தந்தீர்கள் சச்சின்?' 100656810 8e95fd0e dea3 44b4 b357 c459a6ceff32

ஜெண்டில்மேன் விளையாட்டு அல்ல அரசியல்

வேலை செய்யாததால் ஊதியம் தேவையில்லை என்று நீங்கள் திருப்பிக் கொடுப்பதைப் போல பிறரும் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அது நிறைவேறாத கனவாகவே போய்விடும். எச்சரிக்கை!

அவர்களும் உங்கள் வழியை பின்பற்றினால் அவர்களுக்கு அரசியலில் வேலை பறிபோய்விடும். பிறகு அவர்கள் விதைத்ததை எப்படி அறுவடை செய்யமுடியும்? பயிர் விளைச்சலை நம்பி காத்திருக்கும் எலிகளுக்கும், பறவைகளுக்கும் எப்படி உணவு கிடைக்கும்?

90 லட்சம் ரூபாயை நீங்கள் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பு நான் உங்களுடன் பேசியிருந்தால் முக்கியமான விடயத்தை புரிய வைத்திருப்பேன். நண்பரே, அரசியல் ஜெண்டில்மேன்களின் விளையாட்டு அல்ல. கிரிக்கெட்டில் மட்டுமே அவுட் கொடுக்கப்படும், ஓய்வும் உண்டு. ஆனால் அரசியல் விக்கெட்டுக்கு நிறைய அழுத்தங்கள் உண்டு.

_100656812_ddfaa5af-d006-4863-8b99-0054a6620ede  '90 லட்ச ரூபாய் ஊதியத்தை ஏன் திருப்பித் தந்தீர்கள் சச்சின்?' 100656812 ddfaa5af d006 4863 8b99 0054a6620ede

சிந்தனை வேறுபாடு?

ஒற்றை ரன் எடுக்கும் பழக்கமும் உங்களுக்கு உண்டு. ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை. இங்கே, மட்டையை வீசினால் ஒரு பந்தில் நான்கு அல்லது ஆறு ரன்கள் எடுக்கவேண்டும், பந்து வீசுபவராக இருந்தால் அடித்து நொறுக்கும் பவுண்சராக போடவேண்டும்.

பந்தை சேதப்படுத்துவது கிரிக்கெட்டில் தவறு என்றால் அரசியலிலோ அது ஒரு கலை. எந்த அளவு பந்தை சேதப்படுத்துகிறீர்களோ அந்த அளவு பாராட்டப்படுவீர்கள், சன்மானமும் அதிகம்.

ஆனால் சச்சின், உலகமே கிரிக்கெட் மைதானத்திற்குள் அடங்கி விடும் என்று நினைக்கும் உங்களுக்கு சொல்லி புரிய வைக்கமுடியாது.

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் இயல்பானது என்ற தாத்பர்யம், சிறந்த விளையாட்டு வீரரான உங்களிடம் இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆனால் போட்டியில் யார் வென்றாலும், தோற்றாலும், வெற்றி பெறுவது எப்போதும் ‘விளையாட்டு’ மட்டுமே என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்!

ஆனால் உங்களுடைய அடிப்படை இயல்புகளுடன் நாடாளுமன்றத்தின் நடைபாதையில் நீங்கள் மீண்டும் நடைபோட விரும்பினால், மீண்டும் ஒருமுறை 90 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். எச்சரிக்கை!

_100656584_601e830c-415b-402e-bae6-7ceb03b5076d  '90 லட்ச ரூபாய் ஊதியத்தை ஏன் திருப்பித் தந்தீர்கள் சச்சின்?' 100656584 601e830c 415b 402e bae6 7ceb03b5076d

உங்களைப் போன்றவர்கள், லட்சியவாதிகளாக இருப்பதால் அரசியலில் எதாவது செய்துவிட முடியுமா என்ற நோக்கத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய்களாக மாறிவிடுகிறீர்கள்.

நாடாளுமன்ற சகாக்களின் தொல்லைகளையும், இன்முகத்துடன் சகித்துக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இது உங்களால் மட்டுமே முடியும். உங்கள் சகிப்புத்தன்மைக்கு வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர்…

டெண்டுல்கர் தனது ஆறாண்டு கால சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். இது சரியா தவறா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கட்டும், நான் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.

இனிமேலாவது தேர்தலில் வாய்ப்புகள் கொடுக்கும்போது கவனமாக கொடுங்கள்…

சச்சினை போன்ற நியாயவாதிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது அவசியமா என்ன? இதுபோன்ற குணமுடையவர்களின் சுய கெளரவத்திற்காக தொழில் தர்மத்தையே மாற்ற வேண்டுமா என்ன?

90 லட்ச ரூபாயை வீணடிப்பவர் அரசியல்வாதியாக இருக்கலாமா?