மஹிந்த அணிக்கு ஆப்பு வைத்த சுதந்திரக் கட்சி!! அதிரடித் தீர்மானம்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை தவிர்க்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்குபற்றாது என்று அமைச்சர் எ.எச்.எம். பௌசி சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மகிந்த அணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த விவாதம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. 9.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும்.