பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்திற்கு தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் எனவும் அவர் பாராளுமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
நம்பிக்கiயில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட காலமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களும் இந்த பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.