எத்தனோல் எரி ஊற்று ஆறு- பிரமிக்கவைக்கும் உலகின் அதிசயம்….

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் கிழக்கு பகுதியில் கிரீக் என்னும் சிறிய மலைத் தொடர் பகுதி ஒன்று உள்ளது. அங்கே இருக்கும் ஒரு சிறிய நீர் வீச்சியின் கீழ் அணையாத நெருப்பு சுடர் ஒன்று உள்ளது. இது பல வருடங்களாக எரிந்து வருகிறது. ஆனால் இது மீடியாக்களின்  கவனத்தை ஈத்தது இல்லை. தற்போது பல மீடியாக்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

எத்தனோல் நீர் வீழ்ச்சி என்று இதனை கூறுகிறார்கள். இயற்க்கை எரிவாயு அப்பகுதியில் உள்ள நிலத்தில் நிறைந்து காணப்படுகிறது என்றும். அதுவே குன்றின் உள்ளே ஒரு சிறிய ஓட்டை வழியாக வெளியே வருவதனால் அங்கே நெருப்பு எரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சில வேளைகளில் இந்த நெருப்பு அணைந்து போனாலும். பின்னர் தானாகவே அது தீ பற்றி எரிய ஆரம்பித்து விடுகிறது.

இதனை பார்க்க என பல்லாயிரம் மக்கள் தற்போது குவிந்து வருகிறார்கள்.