முற்றுப் புள்ளி வைத்த மஹிந்த நாடாளுமன்றிற்கு வருகை!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்த விவாதத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.மஹிந்த அணியான கூட்டு எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிடவில்லை.

‘ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு மஹிந்த விரும்பவில்லை. அதனால் தான் நம்பிக்கையில்லா பிரேரணையிலும் அவர் கையொப்பமிடவில்லை.அத்துடன் மருத்துவ சிகிச்சையென்ற போர்வையில் எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் மஹிந்த வெளிநாடு பறந்து விடுவார்’ என தகவல்கள் வெளியாகின.

இவ்வாறு எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மஹிந்த சற்றுமுன் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.