இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் ஆசிரியையுடனான ஓரினச் சேர்க்கையை நிறுத்திக் கொள்ளுமாறு கண்டித்த தாயை மகளே அடித்துக் கொலை செய்த உச்சக் கட்ட கொடூரச் சம்பவம் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் புஷ்பா தம்பதியினருக்கு ரஷ்மி ரானா என்ற ஒரு மகள் உள்ளார்.
தனியார் கல்லூரியில் கல்வி பயிலும் ரஷ்மி தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியையோடு உறவு கொண்டுள்ளார்.
ரஷ்மி தனக்கு கற்பிக்கும் ஆசிரியையோடு கொண்டுள்ள தொடர்பு தெரிய வர அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளை பல விதங்களிலும் கண்டித்துள்ளார்.
தாயின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த ரஷ்மி தாயை ஆசிரியையுடன் சேர்ந்து தீர்த்துக் கட்ட திட்டமிட்டு தாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
விடயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மகளும் ஆசிரியையும் சேர்ந்தே தாயை கொலை செய்துள்ளனர் என்ற விடயம் தெரிய வர குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.