இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடால் என்ன ஆகும்??

இரவு உணவுக்குப் பின் சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் ஒரு சிலருக்கு ஒரு சில வேளைகளில் நன்மை தந்தாலும்,பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது.இதற்கு காரணம் வாழைபழத்தில் உள்ள பிரக்டோஸ்(குசரஉவழளந) என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடுவதே.இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால் சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் ஆகும்.காலைக்கடன் எந்த சிரமமும் இல்லாமல் கழியும் என்று கூறுவதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும்,வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.யாரெல்லாம் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடலாம் என்பதிலும் கட்டுப்பாடு உள்ளது.

12 வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம்.தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.வயதானவர்களும் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இரவு நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும்.