கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 50 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஊகங்கள் காணப்பட்ட நிலையிலேயே, பேஸ்புக் புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.ஆகக்கூடியளவில், 87 மில்லியன் பாவனையாளர்களின் தரவுகளை அவர்களது அனுமதியின்றி கேம்பிரிஜ் அனலைடிகா பயன்படுத்தியிருக்கலாம் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.முதலில் பேராசிரியர் ஒருவர் தனது கல்விப்பணிகளிற்காக இந்த தரவுகளை சேகரித்தார். அவர் இதனை விதிமுறைகளிற்கு உட்பட்டே செய்தார் எனவும் பேஸபுக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த தரவுகள் பின்னர் மூன்றாம் தரப்பான கேம்பிரிஜ் அனலைடிகாவிடம் வழங்கப்பட்டன எனவும் பேஸ்புக்குறிப்பிட்டுள்ளது.அடுத்தவாரம் முதல் பொதுமக்களிற்கு அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளனவா என்ற விபரத்தை வழங்கப்போவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.