தியாகி திலீபன் நினைவுத் தூபி மீண்டும் புதுப்பொலிவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் கௌரவமான அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபன் அவர்களது நினைவிடம் இன்றைய தினம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமானம் மேற்கொள்வதற்கான பூர்வாங்கபணிகள் யாழ் மாநகரசபையினால் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.மாநகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ்த்தேசியகூட்டமைப்பினரால் நிறுவப்பட்டிருக்கும் இச் சூழ்நிலையில், அவர்களது முதலாவது உத்தியோகபூர்வ வேலைத்திட்டமாக இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.